கேப்ஸா முறைக்கு மாற்று
கூகுள் நிறுவனம் தற்போது கேப்ஸா முறைக்கு மாற்றாக ரீகேப்சா எனும் பெயரில் புதுமையான பாதுகாப்பு யுத்தியை உருவாக்கி உள்ளது.
பெரும்பாலான இணையதள பக்கங்களில் நுழையும்போது கேப்ஸா குறியீடுகள் கேட்கப்படும். ரோபோக்கள், ஹேக்கர்கள் எளிதில் உள்நுழைதலை தடுக்க இந்த பாதுகாப்பு யுத்திகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வைரஸ் தாக்குதல் மற்றும் தகவல் திருட்டுகள் தடுக்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தற்போது கேப்ஸா முறைக்கு மாற்றாக ரீகேப்சா எனும் பெயரில் புதுமையான பாதுகாப்பு யுத்தியை உருவாக்கி உள்ளது. இணையப் பக்கத்தில் நுழைவது மனிதர்களா, ரோபோவா என்பதை ரீகேப்ஸா முறை எளிதாக வேறுபடுத்தி அறிந்து கொள்ளும். இது பார்வைக்கு புலப்படாத வகையில் ரகசியமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
கேப்ஸாக்கள் சில நேரங்களில் மிக சிக்கலானதாக அமைவது உண்டு. அந்த சிரமத்தைப் போக்கி எளிமையாக உள்நுழையவும் இந்த ரீகேப்ஸா துணை புரிகிறது. இது நமது நடவடிக்கையை வைத்து மனிதனா அல்லது ரோபோவா என்பதை கணிக்கிறது. உதாரணமாக நாம் தட்டச்சு செய்யும் வேகம், அதற்கான நேர இடைவெளி, மவுஸ் இயக்கம், தட்டச்சின் அழுத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் நம்மை கண்காணிக்கிறது. உள்ளே நுழைந்தபிறகும் கூட நாம் எதையெதை பார்க்கிறோம் என்பதையும் கணிக்கிறது. ரகசியங்களை அபகரிக்கும் வகையில் செயல்பாடு இருந்தால் இணையப்பக்கத்தை மூடி நம்மை வெளியேற்றிவிடக்கூடியது ரீகேப்ஸா.

Next Story