தானே மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,390 நிதி ஒதுக்கீடு மாநகராட்சி பள்ளி, கல்வி தரத்தை மேம்படுத்த ரூ.233 கோடி


தானே மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,390 நிதி ஒதுக்கீடு மாநகராட்சி பள்ளி, கல்வி தரத்தை மேம்படுத்த ரூ.233 கோடி
x
தினத்தந்தி 30 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-31T03:19:33+05:30)

தானே மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு 3 ஆயிரத்து 390 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தானே,

தானே மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு 3 ஆயிரத்து 390 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சி பள்ளி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்த ரூ.233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல்

தானே மாநகராட்சியின் 2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கமி‌ஷனர் சஞ்சய் ஜெய்ஸ்வால் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேயர் மீனாட்சி ஷிண்டே பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்டார். இந்த பட்ஜெட்டின் மதிப்பு ரூ.3 ஆயிரத்து 390 கோடி ஆகும்.

இந்த பட்ஜெட்டில் தானே நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.535 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தானே நகரத்தில் காசர்வடவலி, கல்வா, கிட்களி ஆகிய இடங்களில் புதிய போலீஸ் நிலையங்கள் கட்டப்படும். தானேயில் சினிமா ஸ்டூடியோ அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதி ஒதுக்கீடு

தானே மாநகராட்சி பள்ளி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. குடிநீர் திட்டங்களுக்கு ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தானேயில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. பார்சிக் கடற்கரையை நவீனப்படுத்துவற்கு ரூ.50 கோடியும், குழந்தைகள், பெண்கள் நல மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.3 கோடியும், நவீன முறையில் குப்பைகளை அகற்றும் திட்டத்திற்கு ரூ.8 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு தானே மாநகராட்சி பட்ஜெட் 2 ஆயிரத்து 700 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story