ஓசூர் அருகே 14–ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு


ஓசூர் அருகே 14–ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 3 May 2017 9:57 PM GMT (Updated: 2017-05-04T03:27:26+05:30)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அறம்கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத்,

ஓசூர்,

சீனிவாசன் ஆகியோர் ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனபள்ளி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள விவசாய நிலத்தில் ஒரு நடுகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கிருஷ்ணன் கூறியதாவது:– இந்த புதுவகையான நடுகல் மற்றைய நடுகல் போலில்லாமல் முற்றிலும் மாறுபட்டுள்ளது. ஒரு முனிவர் ஆடை, அணிகலன் ஏதுமின்றி அமர்ந்த நிலையில் இரு கால்களையும் மடித்து, கைகளிரண்டும் வணங்கிய நிலையில் தியானம் செய்வது போல் உள்ளது. இந்த கல் சிற்பத்தின் நுணுக்கத்தை காணும்போது 14–ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம். தற்போது கீழே சரிந்து விழும் நிலையில் உள்ள இந்த நடுகல் விரைவில் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story