ராணுவ தொழிற்சாலைகளில் 5186 பணியிடங்கள்


ராணுவ தொழிற்சாலைகளில் 5186 பணியிடங்கள்
x
தினத்தந்தி 31 May 2017 6:26 AM GMT (Updated: 31 May 2017 6:26 AM GMT)

ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் 5 ஆயிரத்து 186 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

10-ம் வகுப்பு படிப்பு தகுதி

ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் 5 ஆயிரத்து 186 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனியே தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த ராணுவ தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் 41 உற்பத்தி தொழிற்சாலைகளும், 22 ஆயுதக் கிடங்குகள், பயிற்சி மையங்கள், பாதுகாப்பு கிட்டங்கிகளும் செயல்படுகின்றன. தற்போது இந்த ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் செமி ஸ்கில்டு பணியிடங்களை நிரப்ப தற்போது விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் உத்தேசமாக 5 ஆயிரத்து 186 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதிநாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித்தகுதி:

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன், என்.ஏ.சி, என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்த கட்டணத் தொகை செலுத்துவதில் விலக்கு அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் 19-6-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்கள், அறிவிப்புகள் www.ofb.gov.in இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அவற்றை விண்ணப்பதாரர்கள் பின்தொடர வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

Next Story