நாகர்கோவிலில் கைவினை பொருட்கள் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


நாகர்கோவிலில் கைவினை பொருட்கள் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Jun 2017 10:30 PM GMT (Updated: 7 Jun 2017 6:07 PM GMT)

நாகர்கோவிலில் கைவினை பொருட்கள் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்,

சுய உதவிக்குழுக்களிலுள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நபார்டு வங்கி மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.3.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் நாகர்கோவிலுள்ள டி.பி.எஸ். அரங்கத்தில் விற்பனை மற்றும் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதனை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சியில் கையால் எம்பிராய்டிங் செய்த பொருட்கள், பல வகையான பழச்சாறு வகைகள், விதைகள் மற்றும் காய்கறிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள், பலவகையான காளான்கள், ஜவுளி பொருட்கள், பலவகையான மசாலா பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு நேரடி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கி உதவி மேலாளர் மார்டின் பிரகாசம், உதவி இயக்குனர் (கைவினை பொருட்கள்) பாலு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல மேலாளர் புருசோத்தமன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story