பாரத ஸ்டேட் வங்கியில் ஆதார் அட்டை இணைக்கும் சிறப்பு முகாம்


பாரத ஸ்டேட் வங்கியில் ஆதார் அட்டை இணைக்கும் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 21 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-21T18:51:17+05:30)

குடியாத்தம் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி வாடிக்கையாளர் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாமை நடத்தியது.

குடியாத்தம்,

மத்திய அரசு சமீபத்தில் வங்கி கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்டது. குடியாத்தம் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி வாடிக்கையாளர் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாமை நடத்தியது. முகாமை கிளை முதன்மை மேலாளர் எம்.ரமேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் களஅதிகாரி மணிகண்டன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாம் இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் ஆதார்அட்டை நகல் மற்றும் பான் கார்டு நகலையும் வங்கியில் நடைபெறும் முகாமில் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Next Story