வேளாண் விற்பனை மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டினார்


வேளாண் விற்பனை மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:15 PM GMT (Updated: 7 Aug 2017 10:04 PM GMT)

தர்மபுரி, பாலக்கோட்டில் வேளாண் விற்பனை மையங்களுக்கு ரூ.6½ கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில் வேளாண் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்கள் வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.6½ கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வளாகம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடம் கட்டுமான பணி தொடக்க விழா வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழகம் முழுவதும் ரூ. 398 கோடியே 75 லட்சம் மதிப்பில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்கள் வினியோகத்துடன் தொடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மிக எளிதாக தாங்கள் சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை விற்பனை செய்யவும், ஏற்றுமதி வாய்ப்பினை அதிகரிக்கவும் வேளாண் வணிக துறையின் மூலம் ரூ.32 கோடியே 44 லட்சம் மதிப்பில் காய்கறிகள் மற்றும் பழங்களில் சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ் தர்மபுரியில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் வேளாண் விற்பனை வணிக வளாகம் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். மேலும் ரூ.5 கோடி மதிப்பில் பாலக்கோட்டில் வேளாண் விற்பனை வளாகம் கட்டி முடிக்கப்படும். இந்த மையங்களை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் வணிக துணை இயக்குனர் மணிவண்ணன், வேளாண்மை அலுவலர்கள் மணிராஜ், அர்ஜூனன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்கள் நாகராஜன், டி.ஆர்.அன்பழகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story