மெகா நில ஊழல் மந்திரி பிரகாஷ் மேத்தாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்


மெகா நில ஊழல் மந்திரி பிரகாஷ் மேத்தாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:31 PM GMT (Updated: 2017-08-08T04:01:17+05:30)

மெகா நில ஊழல் மந்திரி பிரகாஷ் மேத்தாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரிதிவிராஜ் சவான் வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

மும்பை தார்டுதேவ் எம்.பி.மில்ஸ் காம்பவுண்டு பகுதியில் குடிசை சீரமைப்பு ஆணையத்துக்கு சொந்தமான 1 லட்சம் சதுர அடி நிலத்தை விதிமுறைகளை மீறி கட்டுமான அதிபர் ஒருவருக்கு வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா ஒதுக்கீடு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான பிரிதிவிராஜ் சவான் நேற்று குற்றம்சாட்டினார்.

இதற்காக ரூ.500 கோடி முதல் ரூ.800 கோடி வரை கைமாறி இருப்பதாக கூறிய அவர், இந்த மெகா நில ஊழல் குறித்து நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன், இதில் தொடர்புடைய மந்திரி பிரகாஷ் மேத்தாவை உடனடியாக மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story