தேனாம்பேட்டையில் வீடு புகுந்து தங்கத்தினாலான பூஜை பொருட்கள் துணிகர கொள்ளை


தேனாம்பேட்டையில் வீடு புகுந்து தங்கத்தினாலான பூஜை பொருட்கள் துணிகர கொள்ளை
x
தினத்தந்தி 15 Aug 2017 9:43 PM GMT (Updated: 2017-08-16T03:13:03+05:30)

சென்னை தேனாம்பேட்டையில் 100 ஆண்டுகள் பழமையான தங்கத்தினாலான பூஜை பொருட்கள் துணிகர கொள்ளை.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை, ஸ்ரீராம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 80). தனியாக வசிக்கும் இவரை பூசாரி ஒருவர்தான் கவனித்து வந்தார். நேற்று காலையில் பூசாரி வீட்டுக்கு வந்த போது வீடு திறந்து கிடந்தது. சீனிவாசன் கதவை திறந்து போட்டு தூங்கியதாக தெரிகிறது.

திறந்து கிடந்த வீட்டுக்குள் யாரோ மர்ம நபர் புகுந்து, பூஜை அறையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான வைர கற்கள் பதிக்கப்பட்ட சிறிய தங்க கிரீடம், சிறிய தங்க வேல், அம்மன் சிலைக்கு பயன்படுத்தும் தங்க தாலி மற்றும் வெள்ளி பூஜை பொருட்களை கொள்ளை அடித்து சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தேனாம்பேட்டை போலீசார் கொள்ளையனின் கைரேகையை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story