அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் பள்ளியில் கல்லூரி மாணவிகள் பாடம் நடத்தினர்


அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் பள்ளியில் கல்லூரி மாணவிகள் பாடம் நடத்தினர்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-23T03:28:36+05:30)

சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது. தலைவாசல் அருகே ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் பள்ளியில் கல்லூரி மாணவிகள் பாடம் நடத்தினர்.

சேலம்,

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து, ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப் பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி னர்.

நேற்று தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப் பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சேலம் மாவட்டத் தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

எடப்பாடி தாசில்தார் அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கமலகண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆசிரிய- ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

ஓமலூர் பஸ்நிலையம் அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், தமிழக ஆசிரியர் கூட்டணி என அனைத்து அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர் களும் கலந்து கொண்டனர்.

காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

மேட்டூர் தாசில்தார் அலு வலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் பாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏற்காடு தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத் தில் வருவாய் உதவியாளர்கள், ஆசிரியர்கள், நில அளவை யாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆர்ப் பாட்டத்தின்போது கோஷங் களை எழுப்பினார் கள். அங்குள்ள சில பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 68 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 360 ஆசிரிய-ஆசிரியைகள் வேலைபார்த்து வருகிறார்கள். வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 112 பேர் பணிக்கு வந்தனர். 230 பேர் வேலைக்கு வரவில்லை. 18 பேர் விடுமுறை எடுத்து இருந்தனர். இதனால் 20 பள்ளிகள் இயங்காமல் மூடப்பட்டன. இந்தநிலையில் பகுதிநேர ஆசிரியர்கள், கற்கும் பாரதம் ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் இயங்கின.

இதேபோல் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 41 பணியாளர் கள் வேலைபார்த்து வருகிறார் கள். இதில் நேற்று 22 பேர் பணிக்கு வரவில்லை. வேலைநிறுத்தத்தில் ஆணை யாளர், கூடுதல் ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.

தலைவாசல் அடுத்த நாவக்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 9 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அனைவரும் வேலைநிறுத்தத் தில் கலந்து கொண்டனர். இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 143 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று தேவியாக்குறிச்சி தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் 9 பேர் இந்த பள்ளியில் மாணவ-மாணவி களுக்கு பாடம் நடத்தினர். தலைவாசல் பகுதியில் உள்ள சுமார் 25 அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் இதே நிலையில் தான் வகுப்புகள் நடைபெற்றது. தலைவாசல் ஒன்றியத்தில் 66 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 14 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கற்கும் பாரதம் ஆசிரியைகள் பாடம் நடத்தினர்.

தலைவாசல் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை உள்ளன. இதில் 106 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று கற்கும் பாரதம் ஆசிரியை ஒருவர் மூலம் ஒரே அறையில் 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளையும் உட்கார வைத்து பாடம் நடத்தினார்கள். மற்ற வகுப்பு அறைகளை மூடி வைத்திருந்தனர்.

பட்டுதுறை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 140 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஒரே அறையில் 8 வகுப்புகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளையும் உட்கார அவைத்து ஒரு ஆசிரியர் பாடம் நடத்தினார். தலைவாசல் ஒன்றியத்தில் உள்ள 66 தொடக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகளிலும் கற்கும் பாரதம் ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள்.

வாழப்பாடி தாலுகா அலுவலகம் அருகே ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தாசில்தார் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் முருகேசன், பாரதிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story