கிருமிகள் ஒழிக...


கிருமிகள் ஒழிக...
x
தினத்தந்தி 16 Oct 2017 1:15 PM IST (Updated: 16 Oct 2017 1:15 PM IST)
t-max-icont-min-icon

கைகளின் வழியே பரவும் கிருமிகளை ஒழிக்க வந்திருக்கிறது கதவில் பொருத்திக் கொள்ளக்கூடிய கிருமி ஒழிப்புப் பட்டை.

ங்கு பார்த்தாலும் டெங்கு பீதி. வலைத்தளங்களில் பரவுகிறது விழிப்புணர்வு தகவல்கள். பொது இடங்களில் இலவசமாக நிலவேம்பு கசாய வினியோகம். எல்லாம் கொசுக்களால் பரவும் டெங்கு கிருமிகளை ஒழிக்கத்தான். டெங்கு கிருமிகள் மட்டுமல்லாது பல்வேறு கிருமிகளும் நமது கை, வாய் மற்றும் உடலில் உள்ள நுண்துளைகள் வழியே உடலுக்குள் புகுந்து தீமை விளைவிக்கின்றன. கைகளின் வழியே பரவும் கிருமிகளை எளிதாக ஒழிக்க வந்திருக்கிறது கதவில் பொருத்திக் கொள்ளக்கூடிய இந்த கிருமி ஒழிப்புப் பட்டை. இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மின்னணு முறையில் செயல்படும் இந்த பட்டையை உருவாக்கி உள்ளனர். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைபவர்கள், இதில் கைகளை பதித்துவிட்டுச் சென்றால் கிருமிகள் சில விநாடிகளில் அழிக்கப்படுகின்றன. விரைவில் மிதியடிபோல கால்கள் மூலம் பரவும் கிருமிகளை அழிக்கும் கருவியும் வந்தால் வரவேற்போம்! 

Next Story