ஆசிரியை தொல்லை தாங்காமல் விஷம் குடித்த 12-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு


ஆசிரியை தொல்லை தாங்காமல் விஷம் குடித்த 12-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 19 Oct 2017 5:15 AM IST (Updated: 19 Oct 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது41). இவரது மனைவி கவுசல்யா. இவர்களது மகள் தேவயானி(18). தேவயானி ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஈரோடு,

அந்த பள்ளியில் வேதியியல் பாடம் நடத்தும் ஆசிரியை ஒருவர் படிக்க சொல்லி மாணவி தேவயானியை துன்புறுத்தி வந்தார். மேலும் ஒருமுறை கன்னத்திலும் அறைந்து உள்ளார். ரிக்கார்டு நோட்டு குறிப்பிட்ட நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று 2 மணி நேரம் வகுப்பறைக்கு வெளியேயும் நிறுத்தி வைத்துள்ளார். இதுபோக காலாண்டு தேர்வின்போது 15 நிமிடமே தேர்வு எழுதச்செய்து, பேப்பரை பறித்து உள்ளார்.

இதனால் மாணவி தேவயானி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற தேவயானி விஷம் குடித்தார். இதில் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கிக்கிடந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி தேவயானி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பள்ளி ஆசிரியையை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story