செல்போனில் படம் பிடித்த வேலைக்கார வாலிபர் கைது
தொழில் அதிபர் மனைவி குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வேலைக்கார வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை சிஞ்ச்பொக்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 11 மணியளவில் தொழில் அதிபரின் 30 வயது மனைவி தனது வீட்டு குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது, சோப்பு கட்டிகளுக்கு மத்தியில் இருந்து ஒளிதெரிந்தது.
இதை கவனித்த அந்த பெண் சோப்பு கட்டிகளை விலக்கிவிட்டு பார்த்தபோது, செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த செல்போன் குளியலறையில் குளிப்பதை படம் பிடிக்கும் வகையில் வீடியோ ஆன் செய்து வைக்கப்பட்டு இருந்தது.
அதில், அவர் குளிக்கும் காட்சி சில நிமிடங்கள் பதிவாகி இருந்தது. இதை பார்த்து தொழில் அதிபரின் மனைவி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த செல்போன் வீட்டு வேலைக்காரர் கைலாஷ் யாதவ்(வயது20) என்பவருடையது என்பது தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த தொழில் அதிபரின் மனைவி, காலாசவுக்கி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு வேலைக்கார வாலிபர் கைலாஷ் யாதவை கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர், தொழில் அதிபர் மனைவி குளிப்பதை படம் பிடிப்பதற்காக செல்போனை மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 25-ந்தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story