ஜே.இ.இ. மெயின் தேர்வு : விண்ணப்பம் திருத்தம் செய்ய இன்று இறுதி நாள்


ஜே.இ.இ. மெயின் தேர்வு : விண்ணப்பம் திருத்தம் செய்ய இன்று இறுதி நாள்
x
தினத்தந்தி 22 Jan 2018 1:31 PM IST (Updated: 22 Jan 2018 1:31 PM IST)
t-max-icont-min-icon

மத்திய மேல்நிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி., ஜே.இ.இ. எனும் நுழைவுத் தேர்வை என்ஜினீயரிங் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வாக நடத்தி வருகிறது.

மீபத்தில் ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. ஜனவரி 1-ந் தேதி வரை இதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் அதற்கான அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜனவரி 9-ம் தேதி முதல் திருத்தம் நடந்து வந்தது. இதற்கான அவகாசம் இன்றுடன் (ஜனவரி 22) முடிவடைகிறது. எனவே இதுவரை திருத்தம் செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருத்தம் செய்யலாம். திருத்தத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இணைய தளம் வழியாகவோ அல்லது வங்கிகளிலோ கட்டணம் செலுத்தலாம். இ-செலான் மூலம் வங்கிகளில் கட்டணம் செலுத்த நாளை (23-ந்தேதி) கடைசிநாள். இது பற்றிய விவரங்களை https://jeemain.nic.in/ என்ற முகவரியில் பார்க்கலாம்.

Next Story