நெல்லையில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நிலுவைத்தொகையை வழங்க கோரிக்கை
அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்கக் கோரி நெல்லையில் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,

ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்கம் நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உடனடியாக நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், நெல்லை மாவட்டத்தில் பணியில் இருந்தபோது உயிரிழந்த 20–க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை, கையுறை, காலணி ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோஷங்கள்
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தூய்மை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கோபாலன், கணபதி, கோவிந்தன், காளியப்பன், வாசு மற்றும் திரளான துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story