புவனகிரி அருகே குடும்ப பிரச்சினையில் பெண்ணுக்கு கத்திக்குத்து


புவனகிரி அருகே குடும்ப பிரச்சினையில் பெண்ணுக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 27 Feb 2018 3:00 AM IST (Updated: 26 Feb 2018 11:55 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே குடும்ப பிரச்சினையில் பெண்ணை கத்தியால் குத்திய கணவர் மற்றும் மாமனாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

புவனகிரி,

புவனகிரி அருகே கருவேப்பம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திலகராஜ். இவருடைய மனைவி சங்கீதா (வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக கணவன் - மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று திலகராஜிக்கும், சங்கீதாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த திலகராஜ் தனது தந்தை கணேசனுடன் சேர்ந்து கொண்டு சங்கீதாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து சங்கீதா புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகராஜ், கணேசன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story