108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2018 4:00 AM IST (Updated: 9 March 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அண்ணா சிலை அருகில், மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் அண்ணா சிலை அருகில், மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 2017-ம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய சம்பள உயர்வினை பிடித்தம் இல்லாமல் காலதாமதமின்றி முழுவதுமாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வழங்க வேண்டும், ஆம்புலன்சில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு தங்கும் இட வசதி தனியாக ஏற்படுத்தி தர வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இருக்கும் பழுதான ஆம்புலன்ஸ் வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

Next Story