மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்ணை கொன்ற தையல்காரர் கைது + "||" + Tailor arrested for killing a woman on the road

சாலையில் நடந்து சென்ற பெண்ணை கொன்ற தையல்காரர் கைது

சாலையில் நடந்து சென்ற பெண்ணை கொன்ற தையல்காரர் கைது
சாலையில் நடந்து சென்ற பெண்ணை கொன்ற தையல்காரர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, வாலிபர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்தும், சரமாரியாக குத்திவிட்டும் தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணை கொலை செய்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில், அவரது பெயர் அப்துல் அன்சாரி என்பதும், தையல்காரர் என்பதும் தெரியவந்தது. கொலையான பெண் பாலியல் தொழிலாளி என்று கூறிய அப்துல் அன்சாரி தன்னிடம் இருந்த ரூ.9 ஆயிரத்தை திருடியதால் அவரை கொலை செய்ததாக கூறினார்.