பெங்களூரு சிட்டி, யஷ்வந்தபுரம் ரெயில் நிலையங்களில் ‘நாப்கின்’ எந்திரங்கள் அறிமுகம்


பெங்களூரு சிட்டி, யஷ்வந்தபுரம் ரெயில் நிலையங்களில் ‘நாப்கின்’ எந்திரங்கள் அறிமுகம்
x
தினத்தந்தி 9 March 2018 5:01 AM IST (Updated: 9 March 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு ரெயில்வே கோட்டத்தின் பெங்களூரு மண்டல அலுவலகத்தில் 162 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு ‘நாப்கின்’ வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டது.

பெங்களூரு,

மேலும், மகளிர் தினத்தையொட்டி பெங்களூரு சிட்டி மற்றும் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையங்களில் ‘நாப்கின்‘ எந்திரம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மகளிர் தினத்தையொட்டி, நேற்று பெங்களூரு சிட்டி மற்றும் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் அறைகளின் அருகே அமைக்கப்பட்டு இருந்த ‘நாப்கின்‘ எந்திரங்கள் புதிதாக தொடங்கப்பட்டது. இந்த எந்திரங்கள் தலா ரூ.47 ஆயிரம் மதிப்பு கொண்டவையாகும்.

பெங்களூரு ரெயில் நிலையத்தில் உள்ள ‘நாப்கின்’ எந்திரத்தை தென்மேற்கு ரெயில்வேயின் பெங்களூரு பிரிவு பெண்கள் நலத்துறை அமைப்பின் தலைவி வந்தனா சக்சேனா தொடங்கி வைத்தார். ரூ.5 நாணயத்தை எந்திரத்தில் செலுத்துவதன் மூலம் ‘நாப்கின்’ பெற்று கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Next Story