உலகிலேயே இங்கு தான் விலைவாசி அதிகமாம்!
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஈ.ஐ.யூப் என்னும் அமைப்பு, உலகின் பிரபல நாடுகளில் ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் விலைவாசி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிடும்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆய்வில், சிங்கப்பூர் ஐந்தாவது முறையாக முதலிடத்தை பிடித்திருக்கிறதாம்.
சோப்பு, ஷாம்பூ போன்ற பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை சிங்கப்பூரில் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பாரீஸ், பிரான்ஸ் போன்ற நகரங்கள் விலைவாசிப் பட்டியலில் சற்று முன்னோக்கி நகர்ந்தாலும், வாழ்வதற்கு மிக அதிக செலவு பிடிக்கும் நகரமாக சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துவிட்டது.
உதாரணத்திற்கு ஒரு கார் வாங்குவதை எடுத்துக் கொண்டால், அது சிங்கப்பூரில் உங்கள் பர்ஸை மொத்தமாக காலி செய்யும் விஷயமாம். அதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது ஆடைகள். ஒரு ஒயின் பாட்டிலின் விலையைக் கேட்டால் குடிக்காமலே தலைசுற்றும். பாரீஸில் 11.90 டாலர்கள் என்றால், சிங்கப்பூரில் ஒரு ஒயின் பாட்டிலின் விலை 23.68 டாலர்களாம். இவையெல்லாம் சேர்ந்துதான் சிங்கப்பூரை உலகிலேயே அதிக விலைவாசி கொண்ட நகரமாக ஆக்கியுள்ளன.
Related Tags :
Next Story