காஷ்மீரில் சிறுமி படுகொலையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


காஷ்மீரில் சிறுமி படுகொலையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 April 2018 10:15 PM GMT (Updated: 16 April 2018 7:48 PM GMT)

காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை,

காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜமால்முகமது தலைமை தாங்கினார். இதில், தணிக்கை குழு உறுப்பினர் முகமது ஒலி கலந்துகொண்டு பேசியதாவது:-

‘சிறுமியை கடத்திச்சென்று கோவிலில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி செய்யும் காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், குற்றத்தை மறைக்க முயன்ற போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதீய ஜனதா கூட்ட ணியில் நீடிக்கும் மெகபூபா முப்தி அரசின் கையாலாகாத தனத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிறுமி கொலையை கண்டித்தும், மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து பெண்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story