மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் வருகிற 8-ந் தேதி நரேந்திர மோடி-சோனியா காந்தி போட்டி பிரசாரம் + "||" + Narendra Modi-Sonia Gandhi in Karnataka Competition Propaganda

கர்நாடகத்தில் வருகிற 8-ந் தேதி நரேந்திர மோடி-சோனியா காந்தி போட்டி பிரசாரம்

கர்நாடகத்தில் வருகிற 8-ந் தேதி நரேந்திர மோடி-சோனியா காந்தி போட்டி பிரசாரம்
கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெங்களூரு,

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், வருகிற 8-ந் தேதி கர்நாடகத்தில் பிரதமர் நரேந்திர மோடி-சோனியா காந்தி ஆகியோர் போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள். 2 பேரும் ஒரே நாளில் விஜயாப்புராவில் வாக்கு வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.


அதாவது, வருகிற 8-ந் தேதி காலை 11 மணிக்கு விஜயாப்புரா அருகே உள்ள சாரவாடா கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

அதே நாளில் மாலை 3 மணிக்கு விஜயாப்புரா நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டை நடத்துகிறார்.