கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பேர் கைது 160 மதுபாட்டில்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வரதராசன் தலைமையிலான போலீசார் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி சுடுகாடு சாலை அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்த துரை (வயது 42) என்பவர் பிடிபட்டார்.
அவரிடம் இருந்து 31 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாமரை ஏரி
கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி அருகே மது விற்று கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த செல்வம் (34) என்பவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களையும், ரெட்டம்பேடு அடுத்த விளக்கு குண்டு பகுதியில் மது விற்று கொண்டிருந்த சேகண்யம் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (33) என்பவரிடம் இருந்து 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் வேற்காடு பகுதியில் தனியார் ஓட்டலுக்கு பின்புறம் மது விற்ற ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (25) என்பவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களையும், அரும்பாக்கம் சோதனைச்சாவடி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட கொண்டமாநல்லூரை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவரிடம் இருந்து 32 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story