மாவட்ட செய்திகள்

தினம் ஒரு தகவல் : வால் நட்சத்திரங்கள் + "||" + Day one Information: Comets

தினம் ஒரு தகவல் : வால் நட்சத்திரங்கள்

தினம் ஒரு தகவல் : வால் நட்சத்திரங்கள்
“பூமிக்கு ஆபத்து“, “பூமியின் மீது மோத வால்நட்சத்திரம் வரப் போகிறது, அதனால் பூமி அழியப் போகிறது“ என்பது போன்ற செய்திகளை அடிக்கடி படித்திருப்போம்.
 உண்மையிலேயே பூமியின் மீது ஏதாவது ஒரு வால்நட்சத்திரம் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அப்படியே மோதினாலும் பூமி அழிந்துவிடுமா என்று பார்த்தால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாகவே இருக்கிறது.

பூமியை சுக்குநூறாக ஆக்குவதற்கான திறனுடன் விண்வெளியில் லட்சக்கணக்கான வால்நட்சத்திரங்கள் துரத்தித்துரத்தி சுற்றி வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் நல்லவேளையாக பூமியை ஒன்றும் செய்வதில்லை. அப்படியே பூமி மீது மோதினால் மிகவும் பயங்கரமான பாதிப்புகளை உருவாக்கக்கூடிய மிகப் பெரிய வால்நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளன.

பெரிய வால் நட்சத்திரங்கள் பூமியில் மோதும்போது அது மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். மிகப்பெரிய உயிரினங்கள் கூண்டோடு அழிந்துபோகும். அப்படி ஒரு பிரமாண்ட வால்நட்சத்திரம் பூமியில் மோதிய போதுதான் டைனோசர்கள் அழிந்தன. பூமியில் இருந்து டைனோசர்களை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்த பிரமாண்ட வால்நட்சத்திரங்களைப் போன்ற வால்நட்சத்திரங்கள், 10 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூமியின் தலையில் வந்து விழ வாய்ப்பு இருக்கிறது என்று வானியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.

ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட சிறிய விண்கற்கள் பூமியின் மீது அன்றாடம் விழுந்து வந்தாலும் (மாலை, இரவு நேரங்களில் இவை விண்வெளியில் உரசி வரும்போது, எரிந்து தூள்தூளாவதை பார்த்திருக்கலாம்) 100 மீட்டர் சுற்றளவு கொண்ட பிரமாண்ட வால்நட்சத்திரங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே நம் தலையில் விழ வாய்ப்பு இருக்கிறது. இந்த காரணங்களால் நாம் கோடிக்கணக்கான வால் நட்சத்திரங்கள் சுற்றிவந்தாலும் அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்.