நெல்லை சந்திப்பு கைலாசநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


நெல்லை சந்திப்பு கைலாசநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 May 2018 8:45 PM GMT (Updated: 12 May 2018 8:45 PM GMT)

நெல்லை சந்திப்பு கைலாசநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு கைலாசநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கைலாசநாத சுவாமி

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கைலாசநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் மாலை 5 மணிக்கு அப்பர் புறப்பாடு, 6 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 8 மணிக்கு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி- அம்பாள் வீதிஉலா நடக்கிறது. விழா வருகிற 24-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் யாகசாலை பூஜைகள், சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வீதிஉலா ஆகியன நடக்கிறது. 21-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8.30 மணிக்கு செப்பு சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதிஉலாவும், 11.30 மணிக்கு வெள்ளை சாத்தி கோலத்தில் வீதிஉலாவும் வருதல் நடக்கிறது.

தேரோட்டம்

22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆனந்த நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா, மாலை 5.30 மணிக்கு குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் பரிவேட்டை, 6.30 மணிக்கு செப்பு சப்பரத்தில் கங்காளநாதர் வீதிஉலா, இரவு 8.30 மணிக்கு தேர் கடாட்சம் ஆகியன நடக்கிறது.

23-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரியும், 10.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அய்யர் சிவமணி, செயல் அலுவலர் தேவி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story