மாவட்ட செய்திகள்

மார்த்தாண்டத்தில் போலி பாஸ்போர்ட் தயாரித்த வாலிபர் மீது வழக்கு + "||" + A case was filed against a young man who made a fake passport in Marthandai

மார்த்தாண்டத்தில் போலி பாஸ்போர்ட் தயாரித்த வாலிபர் மீது வழக்கு

மார்த்தாண்டத்தில் போலி பாஸ்போர்ட் தயாரித்த வாலிபர் மீது வழக்கு
மார்த்தாண்டத்தில் போலி பாஸ்போர்ட் தயாரித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை,

மார்த்தாண்டம், கொடுங்குளத்தை சேர்ந்தவர் வின்ஸ் சுபி. வாலிபரான இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல ஏற்கனவே முறையாக பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்தார்.

ஆனால், அந்த பாஸ்போர்ட்டை தற்போது பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது. இப்போது அவருக்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல பாஸ்போர்ட் தேவைப்பட் டது. உடனே, வின்ஸ் சுபி ஏற்கனவே இருந்தது போல் போலி பாஸ்போர்ட் தயாரித்து உள்ளார். மேலும், அதனை பதிவு செய்து வெளிநாட்டுக்கு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

போலீசார் விசாரணை

இதனை, மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதை தொடர்ந்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக கண்காணிப்பாளர் ஜிஜி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வின்ஸ் சுபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.