மாவட்ட செய்திகள்

சாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு + "||" + Water Resources Minister Seymour S. Ramachandran participated in the rehabilitation of Sathanur Dam

சாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு

சாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு
சாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதியை பெற்று வருகின்றன. அதாவது 100 கிராமங்கள் சாத்தனூர் அணை தண்ணீரை பெற்று பயனடைந்து வருகின்றன.


இதேபோல் சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரங்களை பெறுவதோடு தண்டராம்பட்டு, தானிப்பாடி, புதுப்பாளையம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும், திருவண்ணாமலை நகர குடிநீர் வசதிக்கும் சாத்தனூர் அணை ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்து அணையின் கொள்ளளவான 119 அடி நிரம்பியது. எனவே, கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் மே மாதம் 8-ந் தேதி வரை சாத்தனூர் அணையின் இடதுபுற கால்வாய் மூலம் 350 கனஅடி நீரும், வலதுபுற கால்வாய் மூலம் 220 கனஅடி நீரும் தொடர்ந்து 90 நாட்கள் திறந்து விடப்பட்டது.

தற்போது 2-ம் போகத்திற்கான பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் கோடை வெயில் அதிகமாக உள்ளதால், கூடுதலாக தண்ணீரை திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அரசு அனுமதி பெற்று 5 நாட்களுக்கு சாத்தனூர் அணை தண்ணீரை திறந்து விட பொதுப் பணித்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை சாத்தனூர் அணையின் இடதுபுற கால்வாயில் 350 கன அடிநீரும், வலது புற கால்வாயில் 220 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி வரை இந்த தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதற்காக நேற்று நடைபெற்ற அணை திறப்பு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு அணையின் பாசன கால்வாயை திறந்து விட்டனர்.

இதில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, சாத்தனூர் அணை கோட்ட செயற்பொறியாளர் ஆர்.மணிமோகன், உதவி செயற்பொறியாளர் பி.வி.ராஜன், உதவி பொறியாளர்கள் கே.செல்வராஜ், ஜெ.கேசவராஜ், பி.ராஜேஷ், திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம், சாத்தனூர் பாசன கால்வாய் சங்க தலைவர் ஜெயராமன், விவசாய சங்க பிரதிநிதி தண்டராம்பட்டு வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். 2-ம் கட்டமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் 246 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படுகிறது. தற்போது சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக உள்ளது. அதாவது 1,710 மில்லியன் கனஅடி நீர் இருப்பில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: பிரதமருக்கு 1 லட்சம் தபால் கார்டுகள் அனுப்பும் விவசாயிகள் மாணவர்களும் பங்கேற்பு
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து விவசாயிகள் பிரதமருக்கு 1 லட்சம் தபால் கார்டுகளை அனுப்பி வருகின்றனர்.
2. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - சரத்குமார் பேட்டி
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
3. மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறைந்தது: கடைமடை பகுதியில் குளங்களுக்கு வந்து சேராத தண்ணீர்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் பல நாட்களுக்கு பிறகு தற்போது 100 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது. இருப்பினும் தஞ்சை மாவட்ட கடைமடை பகுதி குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
4. பொய்கை அணையில் விரிசல் தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்
ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணையில் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தை தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்.
5. கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி: ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது இன்று முழுமையாக தடுக்கப்படும்
கொள்ளிடம் அணையில் இருந்து மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது இன்று (வியாழக்கிழமை) முழுமையாக தடுக்கப்படும். மேலும் பாறாங்கற்கள் மூலம் தடுப்புகள் அமைப்பது நிறைவடைகிறது.