டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்.–எம்.எட். வகுப்பில் மாணவர் சேர்க்கை


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்.–எம்.எட். வகுப்பில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 16 May 2018 8:30 PM GMT (Updated: 16 May 2018 2:39 PM GMT)

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்.–எம்.எட். வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்.–எம்.எட். வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பாடப் பிரிவுகள்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995–ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் பயிலும் இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் ‘B+ சான்று பெற்ற நிறுவனம் ஆகும். கடந்த 2007–ம் ஆண்டு முதல் எம்.எட். வகுப்பு தொடங்கப்பட்டது.

இளங்கலை கல்வியியலில் (பி.எட்.) ஆங்கிலம், கணிதம், பொருளியல் (economics), உயிரறிவியல் (Botany, Zoology, Micro Biology, Plant Biology and Bio technology), பொருளறிவியல் (Physics, Chemistry, Applied Physics, Bio Physics and Applied Chemistry), வணிகவியல் (Commerce) பாடப்பிரிவுகளும், முதுநிலை கல்வியியலும் (எம்.எட்) கற்று தரப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை

பி.எட். மற்றும் எம்.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்வி நுட்பவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் உள்ளன. மேலும் வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரியப் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வங்கியில் கல்விக்கடன் பெறும் வசதி உள்ளது.

இங்கு பயின்ற மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர். மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆசிரியர் தேர்வுக்கான (TET) பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பி.எட். வகுப்பில் மேற்கண்ட பிரிவுகள் மற்றும் எம்.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ–மாணவிகள் 04639–242181 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்து உள்ளார்.


Next Story