மாவட்ட செய்திகள்

ரூ.13½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார் + "||" + District Revenue Officer has provided assistance to the beneficiaries worth Rs 13.50 lakh

ரூ.13½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்

ரூ.13½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
கூனிமேட்டில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.13½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா வழங்கினார்.
பிரம்மதேசம்

மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமை தாங்கினார். மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் ரஞ்சினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரக்காணம் தாசில்தார் சீனுவாசன் வரவேற்றார்.

இதில் ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில் 152 பேருக்கு ரூ.13 லட்சத்து 53 ஆயிரத்து 835 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா வழங்கினார்.

இதையடுத்து வீட்டுமனை, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 162 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் மரக்காணம் துணை தாசில்தார் அசோக், வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தசெழியன், வருவாய் ஆய்வாளர் மோகன பிரியா, கிராம நிர்வாக அலுவலர்கள் மகேஷ்வரன், சண்முகம், முகமது மற்றும் வருவாய் ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனிதாசில்தார் திருநாவுக்கரசர் நன்றி கூறினார்.