பெட்ரோல் விலை 84 ரூபாயை தாண்டியது: வாகன ஓட்டிகள் அதிருப்தி


பெட்ரோல் விலை 84 ரூபாயை தாண்டியது: வாகன ஓட்டிகள் அதிருப்தி
x
தினத்தந்தி 22 May 2018 12:30 AM GMT (Updated: 21 May 2018 11:47 PM GMT)

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 84 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மும்பை, 

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதத்துக்கு 2 முறை மாற்றி அமைத்து வந்தன. ஆனால் கடந்த ஆண்டு முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த நில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. இதன்படி தற்போது லிட்டருக்கு 84 ரூபாயை தாண்டி உள்ளது. அதாவது நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 36 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 17 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வாங்கும் சம்பளத்தில் பாதி பெட்ரோலுக்கே சென்று விடுவதாக இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் புலம்பியபடி சென்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story