நயினார்கோவில் யூனியன் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு


நயினார்கோவில் யூனியன் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 24 May 2018 10:15 PM GMT (Updated: 24 May 2018 6:59 PM GMT)

நயினார்கோவில் யூனியன் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

நயினார்கோவில்

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் பல்லவராயேந்தல் மற்றும் வல்லம் ஆகிய கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பகுதி மக்கள் குடிநீருக்காக தினமும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று உடைப்பில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடங்களில் சேகரித்து வருகின்றனர்.

இதற்காக குழாய் உடைப்பு அருகே உறை அமைத்து அதில் சேரும் தண்ணீரை எடுக்கின்றனர். இந்த சுகாதாரமற்ற தண்ணீரைத்தான் குடிக்க பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது.

எனவே இந்த பகுதி மக்களின் அவதியை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story