ஜனாதிபதியை கோவிலுக்குள் அனுமதிக்காததை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ஜனாதிபதியை கோவிலுக்குள் அனுமதிக்காததை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2018 10:30 PM GMT (Updated: 7 Jun 2018 9:13 PM GMT)

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு தனது துணைவியாருடன் வழிபட சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சாதியின் பெயரால் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காததை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன், மாவட்ட துணைத்தலைவர் அறிவரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் துக்காராம், தர்மபுரி மண்டல தலைவர் மதிமணியன், தலைமை கழக சொற்பொழிவாளர்கள் அண்ணாசரவணன், பழ.வெங்கடாஜலம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் நகர அமைப்பாளர் ராஜா நன்றி கூறினார். 

Next Story