ஏ.டி.எம். கொள்ளை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் பா.ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


ஏ.டி.எம். கொள்ளை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் பா.ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 8 Jun 2018 5:51 AM IST (Updated: 8 Jun 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

புதுவை ஏ.டி.எம். கொள்ளை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் நகர மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சியின் நகர, மாவட்ட செயற்குழு கூட்டம் முத்தியால்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.

* புதுச்சேரி மாநிலத்தில் கடந்த காலங்களில் மீன்பிடிக்க கடந்த காலங்களில் 45 நாட்களாக இருந்த தடைக் காலம் 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.

* புதுவையில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கட்சிகளின் பெயரை சொல்லி தப்பித்து கொண்டிருக்கிறார்கள். இதில் உண்மையான குற்றவாளிகள் யார் என தெரிந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர். இது காவல்துறையின் அலட்சியத்தை போக்கை காட்டுகிறது. புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு போலீசாரின் கையை கட்டிப்போட்டு வேடிக்கை பார்க்கிறதா? என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்.

* புதுவை குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் சிகப்பு நிற அட்டைக்கு வழங்கப்படும் மண்எண்ணெய் ரூ.5 லிட்டரும், மஞ்சள் நிற அட்டைக்கு ஒரு லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்படுகிறது. இதனை மாற்றி அமைத்து சிகப்பு நிற அட்டைக்கு 10 லிட்டரும், மஞ்சள் நிற அட்டைக்கு 5 லிட்டரும் மண்எண்ணெய் வழங்க வேண்டும். இலவச அரிசியை மாதந்தோறும் தடையில்லாமல் வழங்க வேண்டும். கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story