மாவட்ட செய்திகள்

மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்தது: சாலையில் மாத்திரை கொட்டியதால் பரபரப்பு சூறாவளி காற்றில் சிக்கியதால் விபரீதம் + "||" + Mini van dies in the hinge: The tabloid punching on the road

மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்தது: சாலையில் மாத்திரை கொட்டியதால் பரபரப்பு சூறாவளி காற்றில் சிக்கியதால் விபரீதம்

மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்தது: சாலையில் மாத்திரை கொட்டியதால் பரபரப்பு
சூறாவளி காற்றில் சிக்கியதால் விபரீதம்
கங்கைகொண்டான் அருகே மாத்திரைகள் ஏற்றி வந்த மினி வேன் சூறாவளி காற்றில் சிக்கி திடீரென நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

கயத்தாறு,

கங்கைகொண்டான் அருகே மாத்திரைகள் ஏற்றி வந்த மினி வேன் சூறாவளி காற்றில் சிக்கி திடீரென நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் மாத்திரைகள் சாலையில் கொட்டியதால் பரபரப்பு நிலவியது.

மினிவேன் கவிழ்ந்தது

மதுரையில் இருந்து மாத்திரைகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினிவேன் நேற்று மதியம் நெல்லையில் உள்ள மொத்த மருந்து நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தது. கயத்தாறு–கங்கைகொண்டான் இடையே உள்ள பெட்ரோல் பல்க் அருகே ஒரு வளைவில் திரும்பிய போது பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதில் மினிவேன் சிக்கியதால் திடீரென நிலைதடுமாறி மூன்று முறை பல்டி அடித்து எதிர் திசையில் இழுத்து செல்லப்பட்டு மதுரைக்கு செல்லும் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

சாலையில் சிதறிய மாத்திரை

இதனால் மினிவேனில் இருந்த அட்டைப்பெட்டிகளில் இருந்து டப்பாக்களில் இருந்த மாத்திரைகள் வெளியே கொட்டி, சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நெல்லை–மதுரை நாற்கர சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரை போலீசார் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் போலீசாருடன் பொதுமக்களும் சேர்ந்து அங்கு கொட்டி கிடந்த மாத்திரைகளை பெட்டியில் பாதுகாப்பாக அள்ளினர். அதனை தொடர்ந்து கிரேன் மூலம் ரோட்டில் கவிழ்ந்த மினிவேன் மீட்கப்பட்டு, கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகூர் அருகே பொங்கல் விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு; ஆதரவாளர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
பாகூர் அருகே பொங்கல் விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயவேணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி விஜயவேணி எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டார்.
2. வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சாமளாபுரம் பேரூராட்சி பள்ளபாளையத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. புதுவை விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்து ஐ.ஆர்.பி.என். காவலர் படுகாயம்; கைவிரல் சிதைந்தது
புதுச்சேரி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியின்போது திடீரென துப்பாக்கி வெடித்து தோட்டா பாய்ந்ததில் ஐ.ஆர்.பி.என். காவலர் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
4. போலீஸ் பாதுகாப்புடன் கடை உரிமையாளர்களுக்கு சாராயம் வினியோகம்; அரசு வடிசாராய ஆலையில் பரபரப்பு
புதுவை அரசு வடிசாராய ஆலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், சாராயக்கடை உரிமையாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சாராயம் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அரசு வடிசாராய ஆலையில் பரபரப்பு ஏற்பட்டது.
5. விருதுநகரில் வி‌ஷம் குடித்து பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவர்
வி‌ஷம் குடித்துவிட்டு வந்த பிளஸ்–2 மாணவர் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.