மாவட்ட செய்திகள்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூரில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration of the 10-point demands was demonstrated by the Jatoca organization in Perambalur, Ariyalur

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூரில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூரில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூரில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு, ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் செய்ய வேண்டும். கல்வித்துறையை குழப்பத்தில் ஆக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக்கல்வி துறையில் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதை கைவிட வேண்டும்.


அரசு பொதுத்தேர்வு சுமையை கருத்தில் கொண்டு முதுநிலை ஆசிரியர்களை 11,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் சார்பில், நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வரவேற்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மகேந்திரன் பேசினார். இதில் தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி-தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட தலைவர் தேவேந்திரன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்தி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசந்தர் ஆகியோர் 10 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் இணைப்பு சங்கங்களில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்திர கவுதமன் தலைமை தாங்கினார். தமிழக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் மன்ற பொது செயலாளர் இளம்பரதி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், 6, 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தினை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கலந்து கொண்டனர்.