மாவட்ட செய்திகள்

ஆவின் நிறுவனத்தில் வேலை + "||" + Work at Aavin Institute

ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் வேலை
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனத்தில் சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஈரோடு பகுதியில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் ஆபீசர் பணிக்கு மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சென்னைக்கு 66 இடங்களும், திருவண்ணாமலையில் 6 இடங்களும், ஈரோட்டில் 3 இடங்களும் உள்ளன.

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கோஆபரேட்டிவ் டிரெயினிங் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். பி.ஏ. (கோஆபரேட்டிவ்) பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.சி., எம்.பி.சி., டி.என்சி., எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் கட்டண டி.டி. மற்றும் சான்றுகள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் குறிப்பிட்ட முகவரியை 25-6-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.aavinmilk.com. என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 


தொடர்புடைய செய்திகள்

1. இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 890 பணியிடங்கள்
இ.எஸ்.ஐ. மருத்துவமனை - கல்லூரிகளில் 890 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-
2. துணை ராணுவ படைகளில் வேலைவாய்ப்பு
துணை ராணுவ படைகளில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
3. எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 345 வேலைவாய்ப்புகள்
எய்ம்ஸ் மருத்துவ மைய கிளைகளில் 345 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
4. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சி பணிகள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 390 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
5. வேலைவாய்ப்பு செய்திகள்: அழைப்பு உங்களுக்குத்தான்
சென்னை பெட்ரோலியம் கழக நிறுவனத்தில் என்ஜினீயர், எச்.ஆர்.ஐ.டி., சேப்டி ஆபீசர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.