மாவட்ட செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் 18 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் + "||" + If the MLAs decide against the eligibility criteria, we will win the election in 18 constituencies

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் 18 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் 18 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் 18 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
சேலம்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை. அவரது ஆட்சி காலத்தில் மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விட்டது இல்லை. ஆனால் தற்போதைய அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது.

விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவோம். 8 வழிச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் சம்மதத்துடன் நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள் எதிர்த்தால் நாங்களும் எதிர்ப்போம்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். ஐகோர்ட்டில் எங்களுக்கு எதிரான தீர்ப்பு வந்தால், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தினால் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலுடன், இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தினால் கூட அ.ம.மு.க. வெற்றி பெறும்.

இந்த ஆட்சியை எப்போது அகற்றுவீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த ஆட்சி அடுத்த ஆண்டு மே மாதம் வரை தான் நீடிக்கும். தமிழகத்தில் இந்த ஆட்சி தொடருவதற்கு மத்திய அரசு தான் தாங்கி பிடித்து உள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றது போல், 234 தொகுதிகளிலும் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.ம. மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுப்போம்.

பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்காக துரோகம் செய்தவர் ஆட்சி நடத்துவற்கு, ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினால் கூட அதை பெருமையாக தான் கருதுவார். தமிழகத்தில் உள்ள 70 சதவீத இளைஞர்கள், பெண்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. எச்.ராஜாவை கைது செய்யமாட்டார்கள் : டி.டி.வி.தினகரன் பேட்டி
தமிழகத்தில் அடிமை அரசு இருப்பதால் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜாவை போலீசார் கைது செய்ய மாட்டார்கள் என்று பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் டி.டி.வி. தினகரன் கூறினார்.
2. 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
பா.ஜ.க. 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் என பொன். ராதாகிருஷ்ணன் பேட்டியளித்து உள்ளார்.
3. குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி
குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
4. அதிகாரிகள் வீடுகளில் சோதனை: சி.பி.ஐ.யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் நடந்த சோதனையில் சி.பி.ஐ.யின் அடுத்த கட்ட நட வடிக்கை என்ன? என்ற கேள்விக்கு திருச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் கூறினார்.
5. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி
குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.