மாவட்ட செய்திகள்

எதிரிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்த 4 ரவுடிகள் கைது + "||" + 4 rowdys arrested for Plan to kill enemies

எதிரிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்த 4 ரவுடிகள் கைது

எதிரிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்த 4 ரவுடிகள் கைது
தண்டையார்பேட்டையில் எதிர் தரப்பு ரவுடிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி மோட்டார் சைக்கிள்களில் கத்தியுடன் வலம் வந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து வருவதாகவும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவாலி பிரியாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் மற்றும் ரவுடிகளை பிடிக்க துணை கமிஷனர் ரவாலி பிரியா தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால் போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை சோதனை செய்தபோது 10 கத்திகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், தண்டையார்பேட்டை கைலாச முதலி தெருவை சேர்ந்த பிரபல ரவுடிகளான லட்சுமணன் (வயது 26), பிரபு என்ற பிரபாகரன் (28), தில்லை நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (25), ராஜ்குமார் (24) என்பதும், கடந்த ஆண்டு தண்டையார்பேட்டையில் பிரபல ரவுடி ஜீவா என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அரிபாபு என்பவரின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.

மேலும், ஜீவா கூட்டாளிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்ததும், பிரபு வீட்டில் 20 அரிவாள்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி 20 அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நம்பியூர் அருகே பிளஸ்–2 மாணவி தற்கொலை: அரசு பள்ளிக்கூடம் முற்றுகை
நம்பியூர் அருகே பிளஸ்–2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனால் அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகையிட்டார்கள். ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
2. சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது
சாத்தான்குளம் அருகே காதலிக்குமாறு தொந்தரவு செய்து கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
3. காதலிக்கு வேறு இடத்தில் திருமணம்: அந்தமானில் இருந்து ஊருக்கு வந்த ராணுவ ஊழியர் தற்கொலை
காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நடந்ததால் அந்தமானில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்திருந்த ராணுவ ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
4. பிளஸ்–1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே வீட்டு வேலை செய்யாததை பெற்றோர் கண்டித்ததால் வி‌ஷம் குடித்து மாணவி தற்கொலை செய்தார்.
5. கடனை செலுத்த முடியாததால் விரக்தி: தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு
இளையான்குடி அருகே கடனை செலுத்த முடியாததால் தொழிலாளி தீக்குளித்தார்.