மாவட்ட செய்திகள்

இ-மெயிலில் கொலை மிரட்டல் எதிரொலி: முதல்-மந்திரி பட்னாவிசுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு + "||" + E-mail threatening e-mail: Protective growth for chief minister Patnaivis

இ-மெயிலில் கொலை மிரட்டல் எதிரொலி: முதல்-மந்திரி பட்னாவிசுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இ-மெயிலில் கொலை மிரட்டல் எதிரொலி: முதல்-மந்திரி பட்னாவிசுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
கொலை மிரட்டலை அடுத்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தற்போது நாக்பூர் மாவட்டத்தில் நடக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் 2 கொலை மிரட்டல் கடிதங்கள் இ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘எனக்கு வந்த இ-மெயிலின் நகல்களை நான் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்’ என்றார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

‘கடந்த மாதம் கட்சிரோலி வனப்பகுதியில் போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிராக நடத்திய துப்பாக்கிக்சூட்டில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதற்கு பழி வாங்கும் வகையில், முதல்-மந்திரியையும், அவரது குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக இ-மெயிலில் வந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், எங்களில் சிலரை அரசு கொல்வதன் மூலம் எங்கள் சித்தாந்தங்களை உங்களால் அழிக்க முடியாது என அந்த இ-மெயிலில் கூறப்பட்டுள்ளது.

இந்த இ-மெயிலை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளித்து வந்த பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது’. வ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே ஒருமுறை மாவோயிஸ்டுகள் மூலம் முதல்-மந்திரிக்கு மிரட்டல் கடிதம் வந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அவருக்கு மிரட்டல் கடிதம் வந்திருப்பது கட்சியினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல்
மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவிற்கு, ரவுடி புல்லட் நாகராஜ் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
2. காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை காவல்துறையிடம் ஒப்படைத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.!
காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை பா.ஜனதா எம்.எல்.ஏ. காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
3. கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி
“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” என கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு கலப்பு திருமண தம்பதி கேள்வியை எழுப்பியுள்ளனர்.
4. நடிகர் யஷ்சை கொல்ல பிரபல ரவுடி திட்டமிட்டாரா?
நடிகர் யஷ்சை கொல்ல பிரபல ரவுடி திட்டமிட்டாரா? என்பது குறித்து குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சதீஸ்குமார் பதிலளித்துள்ளார்.
5. 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் மோடிக்கே வாக்களிப்பார்கள் முதல்-மந்திரி உறுதி
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் பிரதமர் மோடிக்கே வாக்களிப்பார்கள் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதிபட தெரிவித்தார்.