தர்மபுரி கோர்ட்டில் நக்சலைட் காளிதாஸ் ஆஜர்


தர்மபுரி கோர்ட்டில் நக்சலைட் காளிதாஸ் ஆஜர்
x
தினத்தந்தி 11 July 2018 4:15 AM IST (Updated: 11 July 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் உள்ள கோர்ட்டில் நடந்து வரும் வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக நக்சலைட் அமைப்பை சேர்ந்த காளிதாசை கேரள மாநில போலீசார் நேற்று ஆஜர்படுத்தினார்கள்.

தர்மபுரி,

நக்சலைட் அமைப்பை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் மீது தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சதித்திட்டம் தீட்டுதல், அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக காளிதாசை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த காளிதாசை கேரள போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் அவர் மீது உள்ள வழக்குகள் தொடர்பான விசாரணை விறுவிறுப்படைந்தது. தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, சார்பு கோர்ட்டு மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2 ஆகியவற்றில் அவர் மீது உள்ள வழக்குகள் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது.

இந்த வழக்குகளின் விசாரணைக்காக காளிதாசை கேரள மாநில போலீசார் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் நேற்று தர்மபுரிக்கு கொண்டு வந்தனர்.

தர்மபுரியில் வழக்குகள் நடைபெறும் கோர்ட்டுகளில் நேற்று காளிதாசை ஆஜர்படுத்தினார்கள். வழக்குகள் தொடர்பாக காளிதாசிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story