திருவள்ளூர், நலத்திட்ட உதவிகள்


திருவள்ளூர், நலத்திட்ட உதவிகள்
x

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி கலை, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினர். பின்னர் அவர்கள் 1103 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள், 5 பேருக்கு ஸ்மார்ட் கார்டு, 4 பேருக்கு முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதி, 3 பேருக்கு சிறுவிவசாயி சான்று, 38 பேருக்கு பழங்குடியின சான்று , 51 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 12 பேருக்கு விதவை உதவித்தொகை, 12 பேருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை என மொத்தம் 1228 பேருக்கு ரூ. 17 கோடியே 45 லட்சத்து 16 ஆயிரத்து 500-க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பலராமன், வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் சப்-கலெக்டர் ரத்னா, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மாநில ஜெயலலிதா பேரவை இணைசெயலாளர் செவ்வை சம்பத்குமார், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், ஒன்றிய பொறுப்பாளர் கடம்பத்தூர் ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சரிதா மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story