உணவு தயாரிக்கும் இடத்தை சுகாதாரமாக பராமரிக்காத விடுதி உரிமையாளருக்கு நோட்டீஸ்
நாகையில் உணவு தயாரிக்கும் இடத்தை சுகாதாரமாக பராமரிக்காத விடுதி உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை வெளிப்பாளையம் பகுதியில் இயங்கும் உணவு விடுதிகள் நடத்தி வரும் 2 நிறுவனங்களின் உணவு தயாரிக்கும் இடம் நாகை வெளிப்பாளையம் நாகத்தோப்பு பகுதியில் உள்ளது. இந்த உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமாக இல்லை எனவும், இதுகுறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு மாநில ஆணையருக்கு புகார் அனுப்பபட்டுள்ளது. புகாரைதொடர்ந்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ் உத்தரவின்பேரில், நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் சம்பந்தப்பட்ட உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமாக பராமரிக்கப்படாதது தெரியவந்தது. இதையடுத்து உணவு தயாரிக்கும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். உணவு தயாரிப்பவர்கள் தன் சுத்தத்தை பேண வேண்டும். உணவு தயாரிக்கும் இடத்தை சிமெண்டு தரைத்தளம் அமைப்பதுடன், அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்தி 15 நாட்களுக்குள் வெள்ளையடித்து, அதன் விவரத்தை அறிக்கையாக உணவு பாதுகாப்புத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உணவு நிறுவன உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story