மாவட்ட செய்திகள்

பாலிசி மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக்கோரி எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டம் + "||" + LIC to cancel the GST tax on policy Agents are darna fight

பாலிசி மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக்கோரி எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டம்

பாலிசி மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக்கோரி எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டம்
பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எல்.ஐ.சி. கோட்ட அலுவலகங்கள் முன்பு முகவர்கள் (லிகாய்) சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை கோட்ட அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்துக்கு கோட்ட தலைவர் பூவலிங்கம் தலைமை தாங்கினார். கிழக்கு கோட்ட செயலாளர் கருணாநிதி, மேற்கு கோட்ட தலைவர் ராஜமாணிக்கம், மேற்கு கோட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மகளிரணி அமைப்பாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கோட்ட அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். தர்ணா போராட்டத்தை மாநில செயலாளர் ராஜா தொடங்கி வைத்தார். தஞ்சை கிழக்கு கோட்ட தலைவர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார்.

தர்ணா போராட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வேண்டும். முகவர்களுக்கு உண்மையான ஓய்வூதிய திட்டம் அமலாக்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் எல்.ஐ.சி. மொபைல் செயலி வழங்க வேண்டும். காலாவதியான பாலிசி புதுப்பித்தல் கால அவகாசத்தை 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும்.

பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரி, சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். கணக்கீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும். நேரடி விற்பனை, ஆன்லைன் விற்பனையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முடிவில் கோட்ட பொருளாளர் சம்பத் நன்றி கூறினார்.