மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழாவையொட்டி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை + "||" + Independence Day Festival Railway station Police check out action

சுதந்திர தின விழாவையொட்டி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

சுதந்திர தின விழாவையொட்டி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை
சுதந்திர தின விழாவையொட்டி புதுவை ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுச்சேரி,

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுவை மாநிலத்தில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.


புதுவை ரெயில் நிலையத்தில் போலீசார் நேற்று மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.சிங் மற்றும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு புறப்பட தயாராக இருந்த ரெயிலில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த சிலரை போலீசார் தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை விடுவித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.