சுதந்திர தினவிழா விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
சுதந்திர தினவிழாவில் விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தேவகோட்டை,
தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பெரி.பாலா தலைமையில் அருட்திரு பாஸ்டின் தேசியக் கொடியேற்றினார். ஸ்ரீசின்னப்பன் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் தேவகோட்டை அண்ணாமலை கல்லூரி முன்னாள் முதல்வர் சொக்கலிங்கம் கொடியேற்றினார். லோட்டஸ் வெங்கடாச்சலம் செட்டியார் பள்ளி, ராம்நகர் ஆக்ஸ்வர்டு நர்சரி பள்ளி, புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. முள்ளிக்குண்டு அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஸ்ரீமுருகானந்தா நடுநிலைப்பள்ளியில் பள்ளி புரவலர் மாணிக்கவாசகம் கொடியேற்றினார்.
திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி சுதந்திர தின விழா நடைபெற்றது. பாட்டம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கு வட்டார பொறுப்பாளர் கதிரேசன் தேசியக் கொடியேற்றினார். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்புவனம் கிளை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி அவசரகால குருதி கொடையாளர்கள் முன்பதிவு முகாம் நடைபெற்றது. மானாமதுரை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களில் வைரம் அரிமா சங்க செயலாளர் திருமாவளவன் தலைமையில் பள்ளி செயலாளர் கிறிஸ்டிராஜ் தேசியக்கொடியேற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

சூராணம் பாரதியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நாகசாமி கொடியேற்றினார். அட்சிவயல் ஆரம்ப பள்ளியில் தலைமையாசிரியர் புரட்சித்தம்பி தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கலையரசி கொடியேற்றினார். திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் முருகன் தேசியக் கொடியேற்றினார். திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் மேலாளர் சுகுமார் முன்னிலையில் ஆணையாளர் சந்திரா கொடியேற்றினார். திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா அர்ச்சுணன் தேசியக்கொடியேற்றினார். மடப்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலர் ஜெயசீலன் தேசிய கொடியேற்றினார். மடப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை கலையரசி முன்னிலையில் மடப்புரம் நாட்டாமை சஞ்சீவி தேசியக் கொடியேற்றினார்.
திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி சுதந்திர தின விழா நடைபெற்றது. பாட்டம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கு வட்டார பொறுப்பாளர் கதிரேசன் தேசியக் கொடியேற்றினார். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்புவனம் கிளை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி அவசரகால குருதி கொடையாளர்கள் முன்பதிவு முகாம் நடைபெற்றது. மானாமதுரை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களில் வைரம் அரிமா சங்க செயலாளர் திருமாவளவன் தலைமையில் பள்ளி செயலாளர் கிறிஸ்டிராஜ் தேசியக்கொடியேற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story