அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவு முன்பு திருவண்ணாமலை மாவட்ட அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். டாக்டர்கள் கார்த்திகேயன், சுப்புலட்சுமி, மதர்ஷா மற்றும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணப்படிகளை வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story