மனித உரிமை போராளிகளை வீட்டு சிறையில் வைத்திருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மனித உரிமை போராளிகளை வீட்டு சிறையில் வைத்திருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2018 3:45 AM IST (Updated: 5 Sept 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

மனித உரிமை போராளிகளை வீட்டு சிறையில் வைத்திருப்பதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர்,

மனித உரிமை போராளிகள் பிற்படுத்தப்பட்டோர் உரிமை காவலர்கள், இடது சாரி சிந்தனையாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் ஆகியோர்களை கைது செய்து வீட்டு சிறையில் வைத்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு நடந்தது.

 ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்ட தலைவர் தேனிவசந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலாளர் சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர் முத்துகுமார், மாவட்ட பொருளாளர் பெருமாள்சாமி, சமூக செயல்பாட்டாளர் ஊர்காவலன், மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் சிறப்புறை ஆற்றினர்.


Next Story