விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2018 3:30 AM IST (Updated: 8 Sept 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி, ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் கண்டன உரையாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

சட்டத்திற்கு விரோதமாக கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் அழித்து நிறைவேற்றப்பட உள்ள சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், செண்பகவள்ளி, சுசீலா, ஏழுமலை, தங்கத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story