பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் உருவப்பொம்மை எரிப்பு
நக்சல்களை ஊக்குவிப்பதாக கூறி நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் கிரீஸ் கர்னாட்டின் உருவப்பொம்மையை எரித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேசை கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் 5-ந் தேதி மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில் கவுரி லங்கேசின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி பெங்களூருவில் நடந்த பேரணியில் நடிகர் பிரகாஷ்ராஜ், பிரபல எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியின் போது கிரீஸ் கர்னாட் நான் ஒரு நகர நக்சலைட்டு என்ற பதாகையை கையில் வைத்து கொண்டு வந்தார். அதுபோல நடிகர் பிரகாஷ்ராஜிம் கையில் பதாகையை கையில் வைத்து கொண்டு சென்றார்.
இந்த நிலையில் நக்சல்களை ஊக்குவிப்பதாக கூறி பிரகாஷ்ராஜ், கிரீஸ் கர்னாட்டை கண்டித்து நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் டவுனில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பிரகாஷ் ராஜ், கிரீஸ் கர்னாட்டின் உருவ பொம்மைகளுக்கு பா.ஜனதாவினர் தீ வைத்து எரித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.Related Tags :
Next Story