வானவில் : வளையும் வயர்லெஸ் மவுஸ்


வானவில் :  வளையும் வயர்லெஸ் மவுஸ்
x
தினத்தந்தி 12 Sept 2018 12:43 PM IST (Updated: 12 Sept 2018 12:43 PM IST)
t-max-icont-min-icon

மென்பொருள் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வடிவமைப்பில் உருவானதுதான் ‘ஆர்க் டச் மவுஸ்’.

 இது வழக்கமான மவுஸ் போலன்றி, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மவுஸை வளைக்க முடியும். வலது கை மட்டுமின்றி, இடது கை பழக்கம் உள்ளவர்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறந்த வடிவமைப்புக்கான விருது பெற்றுள்ள இது, வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் செயல்படக் கூடியது. நம் கைக்கு ஏற்ப இந்த மவுஸை மடக்கி பயன்படுத்தலாம். மேலும் நெகிழ்வுத் தன்மையோடு இந்த மவுஸை உருவாக்கியிருப்பதால், நம் தேவைக்கு ஏற்ப நீட்டி, மடக்கி, சுருட்டிக் கொள்ள முடியும்.

கம்ப்யூட்டர் பொருட்களைப் பொருத்தமட்டில் ஆரம்பத்தில் வரும்போது அதிகமான விலை இருக்கும். பின்னர் படிப்படியாகக் குறைந்துவிடும். அதைப்போலத்தான் இதுவும். தொடக்கத்தில் ரூ. 22,999 ஆக இருந்தது. இப்போது 65 சதவீத தள்ளுபடியில் ரூ. 7,999-க்கு அமேசான் இணையதளத்தில் வாங்க முடியும். 

Next Story